search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்கே நகர் தொகுதி"

    கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என்று வடசென்னை திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #KalanidhiVeerasamy
    சென்னை:

    வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி ஆர்.கே.நகர் தொகுதியில் வீடு வீடாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். இப்போது வீடு வீடாக வந்து உங்களிடம் ஆதரவு கேட்பது போல தேர்தலில் வென்றதும் உங்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை, கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன். எனவே என்னை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் என கூறினார்.

    பிரசாரத்தின் போது அவருடன் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சென்று வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019 #KalanidhiVeerasamy
    20 ரூபாய் நோட்டுகளை வீசி டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் 300 பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #ttvdinakaran #rknagar

    ராயபுரம்:

    ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரன் மக்களிடம் வாக்குகளை வாங்குவதற்காக இருபது ரூபாய் நோட்டை டோக்கனாக கொடுத்து ஒரு வாக்குக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்குவதாக உறுதி அளித்ததாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் தங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்ற வில்லை என்றும் சாலை வசதி, கழிவு நீர், குடிநீர் வசதி என எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராமல் தினம் தினம் அவதிப்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    வெற்றி பெற்ற பின்பு இதுவரை தொகுதி பக்கம் வந்து பார்க்காமல் மக்களை ஏமாற்றியது போல வரும் பாராளு மன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளில் இதே போன்று மக்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு தண்டையார்பேட்டையில் உள்ள தினகரனின் ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர்.

    ஆனால் அலுவலகம் பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்ததால் ஆத்திரமடைந்த மக்கள் 20 ரூபாய் நோட்டை கையில் வைத்துக் கொண்டு கோ‌ஷங்களை எழுப்பினர். இதனையடுத்து தங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் டோக்கன் வேண்டாம் என்று இருபது ரூபாய் நோட்டை அலுவலகத்திற்குள் தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    பாராளுமன்றத் தேர்தலில் தினகரனின் சுயரூபத்தை தொகுதி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பவர்களுக்கு தாங்கள் வாக்களிக்கப் போவதாக கூறினர்.

    தண்டையார்பேட்டையில் திடீரென்று பெண்கள் ஒன்று கூடி ஆர்.கே.நகர் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #ttvdinakaran #rknagar

    ஆர்.கே. நகர் தொகுதி புறக்கணிக்கப்படுவதால் மக்கள் பிரச்சனையை தீர்க்க கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். #RKNagar #TTVDhinakaran
    ராயபுரம்:

    ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் இன்று தண்டையார்பேட்டை ரெட்டை குழி தெருவில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜனதா பாசிச ஆட்சி என்று கோ‌ஷம் போட்ட தூத்துக்குடி மாணவி ஷோபியாவை போலீசார் உடனே கைது செய்தனர். ஆனால் போலீசாரையும், நீதிமன்றத்தையும் அவதூறாக பேசிய எச்.ராஜாவை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.

    அவர் போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உள்ளார். அவர் சொன்னது போல போலீஸ் துறைக்கு கல்லீரல் கெட்டுப் போய் உள்ளது என்பதுபோல் இருக்கிறது.


    தமிழிசையிடம் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேட்டவரை பா.ஜனதாவினர் தாக்கி உள்ளனர். இதுதான் பா.ஜனதாவின் பாசிச ஆட்சி. பொதுமக்களிடையே ஒற்றுமை இருக்கிறது. ஆனால் இந்து மதத்தை இவர்கள் தான் காப்பாற்றுகிறார்கள் என்று செயல்படுகிறார்கள்.

    வடமாநிலத்தில் இருப்பது போல் இங்கு இந்து-முஸ்லீம் இடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை. எனக்கு ஓட்டு போட்டதால் அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் மறுக்கிறார்கள் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். ஜிவரத்தினம் தெருவில் ஆட்டோ கேஸ் கம்பெனி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு இன்று தொடர உள்ளேன். ஆர்.கே. நகர் தொகுதி புறக்கணிக்கப்படுவதால் மக்கள் பிரச்சனையை தீர்க்க கோர்ட்டில் வழக்கு தொடருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். #RKNagar #TTVDhinakaran

    சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. #TTVDhinakaran #RKNagarBypoll
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து காலியாக இருந்த சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் ஆகியோர் தோல்வி அடைந்தனர். தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த தேர்தல் முடிவுகள் பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில் டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி சுயேட்சை வேட்பாளர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



    இவ்வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது டிடிவி தினகரன் வெற்றி செல்லும் என்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், சுயேட்சை வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்தது. #TTVDhinakaran #RKNagar #RKNagarBypoll #CaseAgainstTTV

    ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரனை வழி மறித்து 20 ரூபாய் நோட்டுடன் பெண்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ராயபுரம்:

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக டி.டி.வி. தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.

    தேர்தலின்போது வாக்காளர்களுக்கு 20 ரூபாய் நோட்டு டோக்கனாக கொடுக்கப்பட்டது என்றும் ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்பட்டது எனவும் அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர். இதனை தினகரன் மறுத்து வந்தார்.

    சில நாட்களுக்கு முன்பு தண்டையார்பேட்டை யில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தினகரன் வந்த போது 20 ரூபாய் நோட்டை காட்டி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கோ‌ஷமிட்டனர்.

    இந்த நிலையில் தினகரனுக்கு எதிராக மீண்டும் 20 ரூபாய் நோட்டுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தண்டையார்பேட்டையை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் சந்தோஷ், சரவணகுமார், ரசாக் ஆகியோர் புனேவுக்கு சுற்றுலா சென்றபோது அங்கு தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.

    அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்குவதாக தினகரன் அறிவித்து இருந்தார். இதனை வழங்குவதற்காக தினகரன் இன்று காலை தண்டையார்பேட்டையில் உள்ள மாணவர்களின் வீட்டுக்கு வந்தார். அவர் மாணவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். பின்னர் அவர் காரில் புறப்பட்டார்.

    தினகரன் வந்திருப்பதை அறிந்த ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் 20 ரூபாய் நோட்டுடன் ஜீவரத்தினம் சாலையில் திரண்டு இருந்தனர்.

    அவர்கள் தினகரனின் கார் வந்ததும் அதனை மறித்து 20 ரூபாய் நோட்டை காட்டியபடி ரூ.10 ஆயிரம் எங்கே என்று கோ‌ஷமிட்டனர்.

    இதனை கண்டு தினகரனுடன் வந்த ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந் தனர். அவர்கள் 20 ரூபாய் நோட்டுடன் நின்ற பெண்களை பார்த்து சில வார்த்தைகளை கூறினர்.

    இதனால் பெண்களுக்கும், தினகரன் ஆதரவாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் பெண்களை சரமாரியாக தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தினகரனுக்கு எதிராக திரண்டு நின்ற பெண்களும், ஆண்களும் அங்கிருந்து ஓடினர்.

    இதனை படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் தினகரன் ஆதரவாளர்கள் மிரட்டினர். தாக்குதல் சம்பவம் நடந்து கொண்டிருந்த போது காரில் தினகரன் அமர்ந்து இருந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் காசிமேடு போலீசார் ஏராளமானோர் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதையடுத்து அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது.

    இதைத் தொடர்ந்து தினகரன் தனது ஆதரவா ளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். எனினும் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான நிலை நீடித்து வருகிறது. அசம்பாவிதத்தை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தாக்குதல் தொடர் பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்த தாக்குதலில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர். சுமார் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×